Jul 28, 2026
Thisaigal NewsYouTube
5 முக்கிய அம்சங்களை முன்நிறுத்தி பாங் சோக் தாவ்  பிரச்சாரம்
தற்போதைய செய்திகள்

5 முக்கிய அம்சங்களை முன்நிறுத்தி பாங் சோக் தாவ் பிரச்சாரம்

Share:

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பாங் சோக் தாவ், தொகுதி மக்கள் நலன் சார்ந்த 5 அம்ச விவகாரங்களை முன்னிறுத்தி முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டதாரியான 31 வயது பாங் சோக் தாவ், தொகுதி மக்களுக்கு நிலையான பொருளாதார வளர்ச்சி, சிறந்த போக்குவரத்து வசதிகள், அதிவேக இணைய சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உயர்த்துதல் மற்றும் மக்கள் நலனில் அதீத அக்கறை செலுத்துவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி, தமது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கோலகுபு பாருவை கடந்த பத்து ஆண்டு காலமாக தற்காத்துக்கொண்டு, சிறந்த சேவையை வழங்கியவர் என்ற பதிவை கொண்டிருந்த டிஏபி-யை சேர்ந்த அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த லீ கீ ஹியோங் விட்டுச் சென்ற அபரிமித சேவையை தொடரப் போவதாக பாங் சோக் தாவ் உறுதி பூண்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தல்,மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாகும். அதேவேளையில் கோலகுபு பாரு தொகுதி மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் பார்வையும், உதவித் திட்டங்களும், மேம்பாடுகளும் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து, தம்மை வெற்றி பெற செய்யுமாறு தொகுதி வாக்காளர்களை பாங் சோக் தாவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்