Sep 12, 2026
Thisaigal NewsYouTube
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்
தற்போதைய செய்திகள்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

Share:

ஜோகூர் மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அவர்களுக்கு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி நன்றி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் இளையோர் உபகாரச் சம்பளம் திட்டத்தின் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு மாணவர்களுடன் சந்திப்பு நடத்தியதாக மந்திரி பெசார் தெரிவித்தார். இவர்கள் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் உயர்கல்வியைத் தொடர உள்ளனர்.

ஏ- லெவல் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ள ஆறு மாணவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எம்பர் போய் 4 ஏ* பெற்று, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழல், எரிசக்தி மற்றும் வளங்கள் துறையிலும், முஹம்மது ஃபாய்க் ஃபத்துல்லா முகமது யாசிட் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று அதே பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையிலும் பயில உள்ளனர்.

ஹேமராஜ் த/பெ தனபாலன் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையிலும், நூர் மரியம் பிந்தி நோராசம் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று உயிர்வேதியியல் பொறியியல் துறையிலும் கல்வியைத் தொடர உள்ளனர்.

டான் வென் பின் 3 ஏ* மற்றும் 1ஏபெற்று அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையிலும், நூருல் ஹிதாயா பிந்தி நோராசம் 2 ஏ* மற்றும் 2 ஏ பெற்று யூ.சி.எல்-ல் வேதியியல் பொறியியல் துறையிலும் பயில உள்ளனர்.

இந்தச் சாதனை மாணவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜோகூர் மக்களுக்கும் பெருமை அளிப்பதாக ஓன் ஹபிஸ் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் கிடைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டு, தங்களது திறமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், உபகாரச் சம்பளத்தின் மூலம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், ஜோகூரின் பெயரை பெருமையுடன் உயர்த்துவதுடன், தாங்கள் பெற்ற அறிவையும் நிபுணத்துவத்தையும் மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்