Sep 6, 2026
Thisaigal NewsYouTube
காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.
தற்போதைய செய்திகள்

காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.

Share:

காய்கறி பயிரிடும் 38 வயது வங்கதேச ஆடவர் ஓட்டிய சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் காரை கெடா சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே. பறிமுதல் செய்துள்ளது.

நேற்று லங்காவி,ஜாலான் பாடாங் மாட்சிராட், பகுதியில் நடத்தப்பட்ட "ஆப்ஸ் லக்சுரி" சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆடவர் கடந்த 2025 மே 27-ஆம் தேதி முதல் அந்த மெர்சிடிஸ் காரைப் பயன்படுத்தி வந்ததாக கெடா ஜே.பி.ஜே. இயக்குநர் ஸ்டீன் வான் லூதாம் தெரிவித்தார்.

காய்கறிகளை ஈரச்சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையில், கார் தமக்குச் சொந்தமானது எனக் கூறிய அவர், அதன் கொள்முதல் விலையை தெரிவிக்கவில்லை.

மேலும், அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன், வாகன உரிமமும் காலாவதியாகி, காப்புறுதியும் கடந்த ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்திருந்தது ஜேபிஜே சோதனையில் தெரியவந்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து