Aug 17, 2026
Thisaigal NewsYouTube
16- ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே ஆட்டம் ஆரம்பம் – பி.எச்.-பி.என் கூட்டணிக்கு அடிமட்டத்தில் நெருக்கடி
தற்போதைய செய்திகள்

16- ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே ஆட்டம் ஆரம்பம் – பி.எச்.-பி.என் கூட்டணிக்கு அடிமட்டத்தில் நெருக்கடி

Share:

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கியுள்ள நிலையில், 16 ஆது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், பாரிசான் நேஷனல் அடிமட்ட உறுப்பினர்களிடையே பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.

ஜோகூரில் 56 இடங்களில் பாரிசான் நேஷனல் 48 இடங்களையும், நெகிரி செம்பிலானில் 36 இடங்களில் 18 இடங்களையும் கைப்பற்றியது. இதனால் பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அம்னோ அடிமட்டத்தில் ஜசெக எதிர்ப்பு நீடிப்பது பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பான் தனது ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News