பி.கே.ஆர். மற்றும் ஜசெக பேராளர்கள் மாநாடுகளில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும், சட்டமீறல்கள் மற்றும் பெரிய ஊழல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பி.கே.ஆர். தகவல் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ பாஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.
மாமன்னரின் உத்தரவின்படி தாபுங் ஹாஜியைத் தொடர்ந்து பெல்டா உள்ளிட்ட பிற நிறுவனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.
இதற்கிடையே, தற்போதைய நாடாளுமன்ற தவணை முடியும் வரை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் தொடர ஜசெக எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பாஹ்மி வரவேற்றார்.
அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அரசியல் நலனைவிட மக்கள் மற்றும் நாட்டின் நலனே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








