Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்
தற்போதைய செய்திகள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

Share:

கடந்த மாதம் சிம்பாங் அம்பாட்டில் 38 வயது ஆடவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போலீசார் முக்கிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன், பலரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் கூறுகையில், விசாரணையில் இதுவரை உறுதியான காரணமோ ஆதாரமோ கிடைக்கவில்லை என்றும், போலீசார் விசாரணையை முடிக்க பொதுமக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில், ஜாலான் பெர்நியாகாஹான் செரி தம்பூன் - னில் உள்ள கடைத்தொகுதி முன்பு அந்த ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்.

அவர் அருகிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சியை முடித்த பின்னர், முட்டைகள் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்காக சிலர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி