Sep 7, 2026
Thisaigal NewsYouTube
வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.
தற்போதைய செய்திகள்

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

Share:

மலேசியாவின் 69-ஆவது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடத் தயாராகும் நிலையில், இனத்தையும் மதத்தையும் முன்வைத்து வெறுப்பையும் பிளவையும் தூண்டும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய சர்வ சமய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் இன, மத அடிப்படையில் வாக்காளர்களை அணிதிரட்டிய அரசியல் பேச்சுகள் அதிகரித்திருப்பது கவலைக்குரியது என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது.

இனத்தையோ மதத்தையோ காரணம் காட்டி எந்த மலேசியரும் எதிரியாக சித்தரிக்கப்படக் கூடாது என்றும், மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.

வெறுப்பு, அச்சம், பொய்த்தகவல் மற்றும் அவதூறுகளைத் தூண்டுவோருக்கு எதிராக சட்ட அமலாக்க அமைப்புகள் பதவியையும் அரசியல் செல்வாக்கையும் பார்க்காமல் கடுமையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உண்மையான தேசப்பற்று என்பது, நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையைப் பாதுகாப்பதில்தான் உள்ளது என்றும் சர்வ சமய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து