Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி கொள்ளையால் சாலையில் சுருண்டு விழுந்த பெண்
தற்போதைய செய்திகள்

வழிப்பறி கொள்ளையால் சாலையில் சுருண்டு விழுந்த பெண்

Share:

கிள்ளான், ஏப்ரல் 19-

சிலாங்கூர், கிள்ளானில் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுருண்டு விழுந்த பெண் காயங்களுக்கு இலக்கானார்.

கடந்த திங்கள்க்கிழமை காலை மணி 8.50 அளவில், 20 வயதுடைய அப்பெண்ணை மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையன், அவரது கைப்பை பறித்த போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சம்பவத்தை உறுதிபடுத்திய கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் சா ஹுங் போங், பாதிக்கப்பட்ட பெண் கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா சிகிச்சைப் பெற்றதோடு, சம்பவ நாளிலேயே போலிஸ் புகார் அளித்திருப்பதாக கூறினார்.

சம்பவத்தின் போது, அவர் அவரது கைப்பையில் iPhone கைப்பேசி, 114 வெள்ளி ரொக்கம், தனிநபர் ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, கருப்பு நிற யமாஹா Y15 மோட்டார்சைக்கிளில் வந்து கைப்பை திருடி சென்ற கொள்ளையனை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீஸ் முடுக்கிவிட்டிருப்பதாக, சா ஹுங் போங் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்