Jul 28, 2026
Thisaigal NewsYouTube
23 மில்லியன் வெள்ளி மீண்டும் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

23 மில்லியன் வெள்ளி மீண்டும் மீட்கப்பட்டது

Share:

1MDB என சுருங்க அழைக்கப்படும் 1Malaysia Development Berhad நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடி ஊழல் தொடர்பில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இதுவரையில் 2 கோடியே 30 லட்சம் வெள்ளிக்கும் கூடுதலான மதிப்பை கொண்ட சொத்துக்களை மீட்டுள்ளது என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள சொத்துக்களில் ரொக்கப் பணமும் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் வாயிலாக சில நபர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து தனிநபர்கள் அவர்களே முன்வந்து அந்த சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விட்டனர் என்று எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News