Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோருவதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோருவதா?

கோலாலம்பூர், ஜூன்.11-

பினாங்கு தீவில் போக்குவரத்துச் சேவையில் திருப்புமுனையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பாஸ் கட்சியைச் சேர்ந்த பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஃபாவ்வாஸ் முகமட் ஜானை ஜசெக இளைஞர் பிரிவு சாடியது.

கடந்த திங்கட்கிழமை பேரா, ஜெரிக்கில் நிகழ்ந்த உப்சி பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்துடன் தொடர்புபடுத்தி கோரிக்கை விடுத்துள்ள அந்த பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இந்தத் துயரச் சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. மாறாக , நடப்பு சூழலை அறிந்து பேச வேண்டும் எனறு ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் கேட்டுக் கொண்டார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் பிள்ளைகளைப் பறி கொடுத்தவர்கள், மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ள இவ்வேளையில் அந்த விபத்துடன் பினாங்கு முத்தியாரா எல்ஆர்டி ரயில் திட்டத்தைத் தொடர்புபடுத்தி பேசுவது ஏற்புடையச் செயல் அல்ல என்று வூ கா லியோங் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு