Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வெ.16,000 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அரசு ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

வெ.16,000 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அரசு ஊழியர் கைது

Share:

கோலா சிலாங்கூர்,பிப்.7
நிலப் பிரிவின் ஒப்புதலுக்காக 16,000 வெள்ளி லஞ்சம் பெற்றுக் கொண்ட அரசு ஊழியர் ஒருவரை சிலாங்கூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எஸ்.பி.ஆர்.எம்) கைது செய்து நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோலா சிலாங்கூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி தடுப்பு காவலில் வைக்க விண்ணப்பித்ததை தொடர்ந்து இன்று தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் அந்நபர் தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி ஹாஜார் அலி தீர்ப்பு வழங்கினார்.

40 வயதுடைய சந்தேகிக்கும் பெண் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கோலா சிலாங்கூர் எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அரசு ஊழியரான அப்பெண் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மூன்று நில உரிமையாளர்களிடமிருந்து நிலப்பிரிவின் ஒப்புதலுக்காக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

Related News