Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன
தற்போதைய செய்திகள்

ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன

Share:

பாகான் டத்தோ, ஜூன்10-

பேரா, பாகான் டத்தோவில் இரண்டு கிராமங்களில் பிரதான கால்வாய்களில் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக இறந்து கிடந்தது, அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளளது.

கம்போங் சுங்கை தியாங் பாரோ மற்றும் கம்போங் சுங்கை பாயுங் ஆகிய இரண்டு கிராமங்களில் நேற்று திங்கட்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதாக கிராமத் தலைவர் இஷாக் தாலிப் தெரிவித்தார்.

கால்வாய் நீரின் நிறமும் மாறியுள்ளது. தூய்மைக்கேட்டின் காரணமாக மீன்கள் இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News