Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கிய இருவர் கொலை செய்யப்படவில்லை
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கிய இருவர் கொலை செய்யப்படவில்லை

Share:

தவாவ், கம்போங் நசிப் கித்தாவில் வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தாயும் குழந்தையும் நீரில் மூழ்கி நேற்று இறந்ததாக கூறப்பட்ட சம்பவம் கொலையில்லை, திடீர் மரணமே என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில் தவாவ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இது தெரியவந்ததாக தவாவ்மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜஸ்மின் ஹுசின் தெரிவித்தார்.

சவப்பரிசோதனையில் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவொரு சாட்சியங்களும் இல்லை என்றும் இவ்விருவரும் நீரில் மூழ்கிதான் இறந்துள்ளனர் என்று ஜஸ்மின் ஹுசின் கூறினார்.

இச்சம்பவம் குறித்து பொய்யான தகவல் எதுவும் சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்று ஜஸ்மின் ஹுசின் கேட்டுக் கொண்டார்.

Related News