Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் கைது

Share:

17 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி பெண் குமாஸ்தா ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 53 வயது பள்ளி முதல்வர் மற்றும் 50 வயதுடைய பெண் குமாஸ்தா ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு குளுவாங் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

பள்ளியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகைகளை வழங்குவதற்கு கைமாறாக 17 ஆயிரம் வெள்ளி லஞ்சத்தொகையை கேட்டு, அதனை பெற்றுள்ளதாக அவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.

Related News