Jul 28, 2026
Thisaigal NewsYouTube
செம்பனை குத்தகை மோசடி, ஆடவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

செம்பனை குத்தகை மோசடி, ஆடவர் கைது செய்யப்பட்டார்

Share:

செம்பனைத் தோட்ட குத்தகையை பெற்று தருவதாக கூறி, நிறுவனம் ஒன்றின் இயக்குநரை ஏமாற்றியதாக நம்பப்படும் ஒரு லோரி ஓட்டுநரான 39 வயது நபர், காப்பாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியார் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த லோரி ஓட்டுநர், சம்பந்தப்பட்ட இயக்குநரிடமிருந்து 10 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை பெற்று ஏமாற்றியதாக மலாக்கா அலோர் காஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி காப்பாரில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீரஸ் தலைவர் டத்தோ சைனோல் சாமா தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவை முகவரியாக கொண்ட அந்த லோரி ஓட்டுநர், குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் நாளை வெள்ளிக்கிழமை அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

Related News