May 22, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்து மூன்று கார்கள் சேதம்
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து மூன்று கார்கள் சேதம்

Share:

உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசா, கெம்போஜா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் மூன்று கார்கள் பலத்த சேதமுற்றன.

இச்சம்பவம் இன்று மாலையில் பலத்த காற்று, மற்றும் கனத்த மழைக்கு மத்தியில் நிகழ்ந்தது. இது தொடர்பான அவசர அழைப்பை மாலை 4.49 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் ஒரு புரோட்டான் வீரா மற்றும் இரண்டு புரோடுவா மைவி கார்கள் கடுமையாக சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News