மலாக்கா மாநிலத் தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரக்கூடும் என்பதால், தற்போதே அவசரப்பட்டு அறிக்கைகள் விட்டு மோதிக் கொள்ள வேண்டாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மலாக்காவில் பாரிசான் நேஷனல் வென்ற 21 தொகுதிகளையும் தக்கவைக்கப் போவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக, மலாக்காவை பாரிசான் நேஷனலிடமிருந்து பெரிகாத்தான் நேஷனல் கைப்பற்ற வேண்டும் என்று அம்னோ முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜாலில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய பொதுப் பணித்துறை துணை அமைச்சருமான அகமட் மஸ்லான், இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளே தொடங்கவில்லை என்றும், தற்போதே மோதிக் கொண்டால் அது பக்கத்தான் ஹரப்பானுக்கே சாதகமாக அமையும் என்றும் எச்சரித்தார்.








