Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது

Share:

தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு மலேசியாவிற்கு எதிராக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கில் மலேசியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் அஸாலீனா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மலேசியாவிற்கு சாதகமாக இருப்பதாக அஸாலினா குறிப்பிட்டார். எட்டு வாரிசுதாரர்கள் தொடுத்துள்ள இவ்வழக்கு தொடர்பில் மலேசிய சட்டத்துறை அலுவலகம் சார்பில் ஆஜராகியுள்ள டத்தோ அல்மாலீனா ஷர்மலா ஜொஹான், ஸ்பெயினுக்கான மலோசியத் தூதர் டத்தோ அக்மால் சே முஸ்தியாஃபா ஆகியோருடன் அண்மையில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிற்கு தாம் வருகை மேற்கொண்ட போது வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான நம்பிக்கை ஒளி தெரிந்ததாக அஸாலினா தெரிவித்தார்.

Related News