பகாங், ரவூப் வட்டாரத்தில் நேற்று இரவு பெய்த கனத்த மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கொட்டித் தீர்த்த இந்த அடை மழையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, ரவூப்,டேவான் சிம்பாங் கல்லாங் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆறுகளில் கரைப்புரண்டோடிய நீர், இரு மருங்குகளின் கரைகளில் பாய்ந்ததில் ரவூப் வட்டாரத்தின் தாழ்வான பகுதிகளை பாதிக்கச் செய்துள்ளதாக மாவட்ட இயற்கை பேரிடர் துயர்துடைப்பு செயலகம் தெரிவித்தது. அடை மழைக இரவு 8.40 மணியளவில் பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து முன்கூட்டியே ஓர் ஆயத்த நடவடிக்கையாக சமூக மண்டபம் திறக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.







