நாட்டில் தற்போது வரை 5ஜி இணைப்பு 73 விழுக்காடு நிறைவடைந்துள்ளது எனவும் இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காடு இலைக்கை அது அடையும் என தொலைத் தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தலவலை டிஜிட்டல் நேஷ்னல் பெர்ஹாட்டின் தரவுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ளார்.
80 விழுக்காடு இலக்கை அடைய இன்னும் ஏழு விழுக்காடு எஞ்சியுள்ள நிலையில், டிஎன்பி சில சிக்கல்களை முன்வைத்துள்ளது. அவற்றில் நில குறித்த பிரச்சனையை ஊராட்சி மன்றத்துடன் ஒருங்கிணைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
இவ்விவகாரம் குறித்து தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ முஹமாட் சலிம் ஃபாதே டின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
5ஜி என்பது ஒரு தேசிய நிலையிலான முன்னெடுப்பு என்றும் நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பெருக்குவதற்கான கூட்டு முயற்சி என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
5ஜி பயன்பாட்டை மைக்ரோ, சிறிய, நடுத்தர வணிகர்கள் நன்கு புரிந்து கொண்டால் அவர்களின் தொழில்துறை பன்மடங்கு வளர்ச்சி அடையும் என அவர் மேலும் சொன்னார்.








