Jul 16, 2026
Thisaigal NewsYouTube
சிறு வணிகங்களுக்கான கடன் ஒப்புதல்களை 24 மணி நேரத்திற்குள் வழங்க தெக்குன் இலக்கு
தற்போதைய செய்திகள்

சிறு வணிகங்களுக்கான கடன் ஒப்புதல்களை 24 மணி நேரத்திற்குள் வழங்க தெக்குன் இலக்கு

Share:

மலாக்கா, ஜூன்.21-

20 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவான நிதியுதவி கோரும் விண்ணப்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கும் இலக்கை தெக்குன் நேஷனல் நிர்ணயித்துள்ளது என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.

Morten Walk பகுதியில் இன்று நடைபெற்ற Karnival Hebatkan Perniagaan Malaysia நிகழ்வை நிறைவு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விரைவான ஒப்புதல் நடைமுறையானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எனப்படும் MSME-க்கு செயல்பாட்டு மூலதனத்தை உடனடியாகப் பெற்றுத் தர உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டமானது அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News