Jun 21, 2026
Thisaigal NewsYouTube
அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் ஜோகூர் அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - இளவரசர் துங்கு இஸ்மாயில் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் ஜோகூர் அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - இளவரசர் துங்கு இஸ்மாயில் வலியுறுத்து

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

ஜோகூர் மாநில அரசாங்கம் மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறி விட்டதாக அடிப்படை ஆதாரமின்றி எந்த ஒரு தரப்பும் சித்தரிக்கக்கூடாது என அம்மாநில பட்டத்து இளவரசரும், இடைக்கால சுல்தானுமாகிய துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

மாநில ஆட்சியில் அமலுக்கு வரும் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அனைத்து உத்தரவுகளும் வெறுமனே அறிவிப்பாக மட்டுமல்லாமல், நடைமுறையில் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதைத் தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூவாரில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசாங்கம் மக்களை சரியாக கவனிக்கப்பதில்லை என யாரும் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறக்கூடாது என்று வலியுறுத்தினார்.

மேலும், மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால், உடனடியாக ஜோகூர் இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி மற்றும் மாநில அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் நேரடியாக விளக்கம் கேட்பதாகவும் துங்கு இஸ்மாயில் விவரித்துள்ளார்.

அதேவேளையில் தமக்கு வெறும் வாக்குறுதிகளோ கற்பனைக் கதைகளோ பிடிக்காது என்றும், செயல்படுத்தப்படாத கற்பனைகளோடு கூடிய தொலைநோக்குப் பார்வை என்பது வெறும் மாயை மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News