Jul 10, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: விசாரணையைத் தீவிரப்படுத்த தற்காப்பு அமைச்சர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: விசாரணையைத் தீவிரப்படுத்த தற்காப்பு அமைச்சர் வலியுறுத்து

Share:

கோத்தா திங்கி, ஜூன்.21-

கெடா மாநிலம், குருனில் உள்ள Hobart முகாமில், கடந்த செவ்வாய்க்கிழமை, கையெறி குண்டு வீச்சுப் பயிற்சியின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில், இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை விரைவாகக் கண்டறிவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விசாரணையின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அனுபவங்களை எதிர்காலத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இச்சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க, இராணுவப் பயிற்சிகளில் பாதுகாப்பு தரநிலைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை கையெறி குண்டு தொடர்பான அனைத்து இராணுவப் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலிட் நோர்டின் அறிவித்துள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்