Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ புயல் பாதிப்பு: கிட்டத்தட்ட 500 போலீஸ் புகார்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

ஈப்போ புயல் பாதிப்பு: கிட்டத்தட்ட 500 போலீஸ் புகார்கள் பதிவு

Share:

ஈப்போ, ஜூன்.21-

பேராக் மாநிலம் ஈப்போவின் பெர்சாம் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான புயல் தாக்கத்தைத் தொடர்ந்து, இதுவரை கிட்டத்தட்ட 500 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, புயல் தொடர்பாக மொத்தம் 492 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜீப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் புகார் அளிப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் திருட்டு அல்லது உடைத்துச் சென்று கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, பேரிடர் பாதிப்பு பகுதிக்குள் உள்ள ஐந்து மண்டலங்கள் மூடப்பட்டு, அப்பகுதிக்குள் நுழைவு மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News