Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜிஆர்சி நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஜிஆர்சி நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும்

Share:

சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஆர்சி எனப்படும் நாடாளுமன்ற குழு பிரதிநிதித்துவ முறையை மலேசியாவில் அமல்படுத்துவதற்கு மலேசிய தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி. ஷாஹிடான் காசிம் இன்று மக்களவையில் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த ஜிஆர்சி நடைமுறையின் வாயிலாக மக்களவையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்று ஆராவ் எம்.பி.யான ஷஹிடான் காசிம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கடந்த 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற குழு பிரதிநிதித்துவ முறை வாயிலாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் போதுமான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்கிறது என்று ஷஹிடான் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு நாட்டின் மக்கள் தொகையில் இந்திய சமூகத்தினர் 6.6 விழுக்காட்டினராக உள்ளனர். இந்த எண்ணிக்கையானது, நாடாளுமன்ற குழு பிரதிநிதித்துவம் மூலம் இந்திய சமூகம் மக்களவையில் 16 இருக்கைகளை இயல்பாகவே பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், மக்களவையில் தற்போது பார்த்தால் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவ எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதை காண முடியும் என்று ஷஹிடான் குறிப்பிட்டார்.

Related News