Rawang, Bandar Tasik Puteri சாலையில் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் mikromobiliti எனப்படும் மின்சார வாகனத்தை செலுத்தி சென்ற ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகிய 30 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று நேற்று பிற்பகல் 12 மணியளவில் தமது தரப்பின் கவனத்திற்கு வந்ததாக Gombak மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Noor Ariffin Mohamad Nasir கூறினார்.
சம்பந்தப்பட்ட வாகனம் Tan Sri Low Yow Chuan - விலிருந்து Bandar Tasik Puteri, Lembah Hijau 3 - விற்கு சாலையின் வலதுப் புறத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Noor Arrifin அறிவித்தார்.
அதில் சம்பந்தப்பட்ட நபர் உட்பட பொதுமக்களும் பாதிப்படைய சாத்தியம் இருப்பதால் அந்நபரை தீவிரமாக போலீசார் தேடி வருவதுடன் இக்காணொளி குறித்து dashboard கேமராவில் பதிவாகியுள்ள காரின் உரிமையாளரை விசாரணைக்கு உதவும் வகையில் Gombak மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக Noor Arrifin வலியுறுத்தினார்.








