இன்று காலை, கிள்ளான் துறைமுகத்திலுள்ள Kampung Telok Gong கில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, treler ஒன்று மோதியதில் ஒன்பது வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, 54 வயதுடைய தனது காப்பாளருடனும், ஏழு வயதுடைய சிறுவனுடனும் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுற்குச் செல்லும் வழியில், treler மோதி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.
அந்த காப்பாளரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அப்பள்ளி மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாணவியின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய மற்ற இரு நபரும், சிகிச்சைக்காக கிள்ளான் , Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.








