Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோலை கடத்தியதற்காக 2 ஊழியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பெட்ரோலை கடத்தியதற்காக 2 ஊழியர்கள் கைது

Share:

கிளந்தான், மே 08-

கிளந்தான், ஜாலான் பாசிர் பெக்கான்னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில் இரண்டு பேர் பெட்ரோல் நிலையத்தின் ஊழியர்கள் என்று தெரியப்படுகின்றது.

நேற்று காலை 9.45 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 30 வயது ஆடவர் ஒருவர் புரோட்டான் வாஜா ரக காரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக கிளந்தான், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

410 வெள்ளி மதிப்பிலான 200 லீட்டர் பெட்ரோலை காரின் எண்ணெய் தாங்கியில் சந்தேகிக்கும் நபர் நிரப்பியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அஸ்மான் இஸ்மாயில் அறிவித்தார்.

இச்சோதனையின் போது 20 மற்றும் 40 வயதுடைய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதுடன் மேல் விசாரணைக்காக பெட்ரோல் விற்பனை தொடர்பான சில ஆவணங்களும் அந்நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அஸ்மான் இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

பெட்ரோலை கடத்தியதற்காக 2 ஊழியர்கள் கைது | Thisaigal News