Dec 2, 2025
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தைரழ ரசாருடினும் / அயோப் கானும் கையாளுவர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தைரழ ரசாருடினும் / அயோப் கானும் கையாளுவர்

Share:

நாட்டில் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் வேளையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டக்கூடிய இனவாத அரசியல் பிரச்சாரங்கள் நடைபெறுவதை தடுக்க 3ஆர் விவகாரத்தை போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் உசேன்னும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சையும் கையாளுவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 3ஆர் விவாகரத்தை மக்கள் கையில் எடுத்துவிடாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே போலீஸ் துறையில் புதிய பொறுப்பில் அமரவிருக்கும் ஐ.ஜி.பி.க்கும், துணை ஐ.ஜி.பி.க்கும் முதன்மை பொறுப்பாகும் என்று சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்தித்த போது இந்த இந்த 3ஆர் விவகாரத்தில் பிரத்தியேக கவனத்தை செலுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் விளக்கினார்.

Related News