Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தார் கற்கள் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

தார் கற்கள் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

கம்பார், ஜூன் 06-

கம்பார், ஜாலான் தஞ்சூங் துவாலாங்-மாலிம் நாவார் 4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் டிரெய்லரிலிருந்து தார் கற்கள் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் 59 வயது ஹனபியா இஸ்மாயில் என்ற அந்த ஆடவர் தஞ்சூங் துவாலாங் - கிலிருந்து கம்பார் -ருக்கு சென்று கொண்டிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட டிரெய்லருக்கு பின்னால் சுமார் 10 மீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிளில் அவர் வந்து கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அவ்விடத்தில், 48 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற டிரெய்லரின் இணைப்பான் சேதமடைந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது நஸ்ரி தாவூத் தெரிவித்தார்.

மேலும், அந்த டிரெய்லரிலிருந்து தார் கற்கள் சாலையில் விழுந்ததுடன் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியையும் பதம் பார்த்ததாக முகமது நஸ்ரி இன்று கூறினார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை டிரெய்லர் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக முகமது நஸ்ரி மேலும் குறிப்பிட்டார்.

Related News

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி

பினாங்கு நிலவரி உயர்வு: அந்தோணி லோக்கிடம் சாவ் கோன் இயாவ் அறிக்கை சமர்ப்பிப்பு

பினாங்கு நிலவரி உயர்வு: அந்தோணி லோக்கிடம் சாவ் கோன் இயாவ் அறிக்கை சமர்ப்பிப்பு

தார் கற்கள் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி உயி... | Thisaigal News