Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரச்னைக்குரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு சம உரிமை வழங்கப்படாது
தற்போதைய செய்திகள்

பிரச்னைக்குரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு சம உரிமை வழங்கப்படாது

Share:

புத்ராஜெயா, மே 06-

பொதுச் சேவையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களை கண்காணித்து, அடையாளம் காணுமாறு அனைத்து பொதுச்சேவை பணியாளர்களையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பணியில் கவனக்குறைவு, சோம்பேறித்தனம், அடிக்கடி வேலைக்கு மட்டம் போடுதல் ஆகிய கட்டொழுங்கு பிரச்னைக்குரிய அரசு ஊழியர்களுக்கு, மற்ற பணியாளர்க்கு கொடுப்பதைப் போன்று சமமாக சம்பள உயர்வு கிடைக்காது என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

உதாரணமாக, ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் வேளையில் மறுபக்கத்தில் சில ஆசிரியர்களும் பிரச்னைக்குரியவர்களாக இருக்கவே செய்கின்றனர் என்று பிரதமர் கூறினார்.

அதுப்போலதான், அலுவலகங்களிலும். சிறப்பாக கடைமையை செய்து வரும் பொதுச்சேவை ஊழியர்கள் ஒருப்புறம் இருக்க ஊழல், ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில குழுக்களும் இருக்கவே செய்கின்றனர்.

எனவே, பிரச்னைக்குரிய பொதுச்சேவை பணியாளர்களுக்கு சக ஊழியர்களை போல அங்கீகாரங்கள் கிடைக்கப்படாது என்பதை உணர்ந்திட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்