Nov 13, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்திய எச்கேஎல் மருத்துவர்களுக்குப் பிரதமர் அன்வார் பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்திய எச்கேஎல் மருத்துவர்களுக்குப் பிரதமர் அன்வார் பாராட்டு

கோலாலம்பூர் கெப்போங் பகுதியில் பாராங்கத்தியால் தாக்கப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து, கையை மீண்டும் பொருத்திய கோலாலம்பூர் மருத்துவமனையான எச்கேஎல் மருத்துவர்களுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக் குழுவினரின் திறமை பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 26 வயதான லான்ஸ் கோப்ரல் தியேரி ராட்கேர் ஃபெண்டி, கடந்த புதன்கிழமை டெசா அமான் பூரி பகுதியில் வெளிநாட்டு ஆடவர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் வலது கையை இழந்தார்.

அவருக்கு எச்கேஎல் மருத்துவமனையின் நுண் அறுவைச் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் எலன் ரவி ராஜகோபால் மற்றும் டாக்டர் அஸிஸ் சபீர் ஹுசேன் தலைமையில், சுமார் 8 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கையை மீண்டும் பொருத்தினர்.

இதற்கிடையில், குற்றச்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும், நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு உறுதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

உயர்ந்த கல்வி இருந்தும் தாழ்ந்த பண்பாடு: மக்களைப் பிளவுபடுத்த மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் – ஹாடிக்கு சாங் லி காங் அறிவுரை

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

மதம் ஒருவரின் அடக்குமுறையை அளவிடும் அளவுகோல் அல்ல – ஹாடி அவாங் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்: யுனேஸ்வரன் ராமராஜ்

சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 3 கோடியே 645 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 3 கோடியே 645 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

முஸ்லிம் அல்லாத தலைவர்கள் அதிக அடக்குமுறையாளர்கள் என்ற ஹாடியின் கருத்துக்கு சைஃபுடின் கடும் கண்டனம்

முஸ்லிம் அல்லாத தலைவர்கள் அதிக அடக்குமுறையாளர்கள் என்ற ஹாடியின் கருத்துக்கு சைஃபுடின் கடும் கண்டனம்

அநீதி என்றால் அது அநீதிதான்! ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்

அநீதி என்றால் அது அநீதிதான்! ஹாடி அவாங் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்