Nov 13, 2026
Thisaigal NewsYouTube

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

கோலாலம்பூர், கெப்போங் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், போலீஸ் அதிகாரி ஒருவரின் வலது கையை வெட்டித் துண்டித்த தாக்குதலில் ஈடுபட்டு, பின்னர் போலீஸ் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெளிநாட்டவரின் கடப்பிதழ் காலாவதியானது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மாணவர் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாட்டில் தங்கியிருந்ததாகவும் சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.

அவரது மாணவர் அனுமதிச் சீட்டும் கடப்பிதழும் காலாவதியாகியிருந்ததால், அவர் சட்டவிரோதக் குடியேறியாக நாட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

32 வயதான அந்த ஆடவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை மாணவர் அனுமதிச் சீட்டு வைத்திருந்ததாக குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு, இரண்டு பாராங்கத்திகளுடன் போலீஸ் அதிகாரியைத் தாக்கியதில், 26 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது.

தப்பியோடிய சந்தேக நபர், பின்னர் போலீஸ் துறையினரை மீண்டும் தாக்க முயன்றபோது சுடப்பட்டார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!