Nov 13, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்துவதற்காக, 50 நாட்களுக்கும் குறைவான காலத்தில் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை பாரிசான் நேஷனல் வெளியிட வேண்டும் என அங்காத்தான் மூடா கெஅடிலான் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் சவால் விடுத்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் குறித்து மக்கள் மதிப்பீடு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சில விவகாரங்கள், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக அடாம் அட்லி சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக, சில முக்கியப் பிரமுகர்கள் தொடர்பான வழக்குகளில் வீட்டுக் காவல் போன்ற சலுகைகள் குறித்த விவாதங்கள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பால் அல்லது ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் திருடும் சாதாரண மக்கள் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலையில், மில்லியன் கணக்கிலும் பில்லியன் கணக்கிலும் பணத்தைக் கையாடல் செய்த பெரிய மனிதர்களுக்கு மட்டும் ஏன் வேறுபட்ட அணுகுமுறை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

நஜிப் வீட்டுக் காவல் விவகாரத்தில் 50 நாட்களுக்குள் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் ரிங்கிட் வீதம் எவ்வாறு திரட்டப்பட்டது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் முன் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்றும், இன மற்றும் மத உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அடாம் அட்லி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!