Nov 13, 2026
Thisaigal NewsYouTube

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக்கின் மன்னிப்பு கோரும் மனுவை கடந்த 2023-ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியத்தின் முன் சமர்ப்பித்தது, அவரது மன்னிப்பு கோரும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவே என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தாமான் மலாக்கா பெர்டானாவில் நடைபெற்ற ‘பெஸ்தா மலாக்கா, ரூமா கீத்தா’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு கைதிக்கும் யாங் டிபெர்துவான் அகோங்கிடம் மன்னிப்பு கோரி மனு சமர்ப்பிக்கும் உரிமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற முறையில் யாருக்கும் அநீதி இழைத்ததாகத் தம்மீது குற்றச்சாட்டு எழுவதை விரும்பவில்லை என்றும், அந்த உரிமையைத் தடுத்திருந்தால் அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை மறுப்பதற்குச் சமமாகியிருக்கும் என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த முடிவால் ஊழலுக்கு எதிரான தனது கொள்கையை அன்வார் கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில், மனுவை மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்புவது மட்டுமே தனது பொறுப்பு என்றும், மன்னிப்பு வழங்குவது குறித்த இறுதி முடிவு யாங் டிபெர்துவான் அகோங்கின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நஜிப்பின் மருத்துவ அறிக்கைகள், சிறைச்சாலைப் பதிவுகள் மற்றும் சிறையில் அவரது நடத்தை குறித்த அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும் மன்னிப்பு மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி