தெலுக் இந்தான் லங்காப் பகுதியிலுள்ள இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகளிடம் பாலியல் ரீதியான உடல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
56 வயது ஸைடி அப்பாஸ் என்ற அந்த முன்னாள் ஆசிரியர், 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இக்குற்றங்களைப் புரிந்ததாக தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மலாய் மொழி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவிகளிடம் காரிலும், பள்ளி சிற்றுண்டிச்சாலை மற்றும் தனி அறையிலும் பாலியல் நோக்கத்துடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு எதிரான 2027 ஆம் ஆண்டு பாலியல் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் ஆசிரியருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.
எனினும் தனக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியதால் அவரை 40 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.








