போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சமர்ப்பித்துள்ள பதவி விலகல் கடிதம் குறித்து முடிவெடுப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தமக்கு அக்கடிதம் கிடைத்துள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்வது குறித்து மீண்டும் பரிசீலிக்கவும், கலந்துரையாடவும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அந்தோணி லோக்கின் பதவி விலகலைத் தாம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள மட்ராசாதுல் கொத்தியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்தோணி லோக் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.








