Nov 13, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என நடித்த ஆடவர், புதிய மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்

சிலாங்கூர் ராஜா மூடாவின் தனிப்பட்ட பாதுகாவலர் என கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்த அல் ஸுல்ஃபட்லி அலியாஸ் என்ற நபர், வாகன ஏல விற்பனை மோசடி தொடர்பான புதிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

40 வயதான அல் ஸுல்ஃபட்லி அலியாஸ் மற்றும் 37 வயதான நூருல் நூர் ஷாஹிரா கமாருடின் ஆகிய இருவரும் இணைந்து, ஏலத்தின் மூலம் 40 ஆயிரம் ரிங்கிட்டுக்கு Lexus RX350 ரக காரை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டலாஸ் பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அல் ஸுல்ஃபட்லி குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், நூருல் நூர் ஷாஹிரா குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இவ்வழக்கில் இருவருக்கும் தலா 8 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், மாதந்தோறும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபரின் கடப்பிதழ் காலாவதியானது – சிலாங்கூர் போலீஸ் துறைத் தலைவர்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை – அவசரப்படத் தேவையில்லை என்கிறார் அன்வார்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

டிசம்பரில் பயணிகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறுக்குப் பிந்தைய உதவித்தொகை மசோதாக்கள் தாக்கல்: ரமணன்

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

நஜிப் ரஸாக்கின் அபராதத்தைச் செலுத்தத் திரட்டிய 5 கோடி ரிங்கிட் நிதியின் நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் – அடாம் அட்லி

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!

2023-ல் நஜிப்பின் மன்னிப்பு மனுவை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பித்தது ஏன்? – அன்வார் விளக்கம்!