Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தூண்டிவிடும் போக்கை நிறுத்திக்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் போக்கை நிறுத்திக்கொள்வீர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 27-

அல்லாஹ் என்று சொல் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனை தொடர்பில் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி, பிரச்னையை பூதகரமாக்குவதை அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புக்கிட் அமான் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்குவதை விடுத்து, அமைதி நிலைக்கு அனைத்து தரப்பினரும் திரும்ப வேண்டும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கய்ரி ஜமாலுட்டின் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு தாம் உடன்படுவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மோஹட் ஷுஹைலி மோஹட் ஜெயின் தெரிவித்துள்ளார்.

3R விவகாரம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இனம் சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது ஆளும் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் மற்ற தரப்பினராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இவ்விவகாரத்தை தொடர்வதை அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மோஹட் ஷுஹைலி எச்சரித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்