Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் திடீர் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் திடீர் அதிர்ச்சி

Share:

சிக், ஏப்ரல் 11 -

நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஒரு குடும்பத்தினருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு, அனைவரும் சிறிது நேரம் பதற்றத்தில் நிலைக்குத்திய சம்பவம் நேற்று கெடா, சிக், கம்பூங் கோத்தா ஆவுரில் நிகழ்ந்தது.

வீட்டின் பிரதான குளிரூட்டிப் பகுதிக்குள் பாம்பு சட்டை இருப்பதை கண்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்ததுடன், இதர குடும்ப உறுப்பினர்களும் அதனைப் பார்த்து பயந்து வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். .

பின்னர் இது குறித்து தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்., அந்த வீட்டிற்கு விரைந்த எழுவர் அடங்கிய வீரர்கள், குளிரூட்டியின் முகப்பை பை திறந்து சோதனை செய்த போது அது கருநாகத்தின் சட்டை என்பதை உறுதி செய்தனர்.

எனினும் அந்த குளிரூட்டிக்குள் பாம்பு இல்லாததைக் கண்ட அவர்கள், சுமார் 15 நிமிடம் வீட்டை நன்கு சோதனை செய்தப்பின்னர் பாம்பு இல்லை என்பதை உறுதி செய்தனர் என்று சிக் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தான்ஜில் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்