Nov 23, 2026
Thisaigal NewsYouTube

மைசைரன் அவசர எச்சரிக்கை முறை: கைப்பேசி உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகாது – ஃபாஹ்மி ஃபாட்ஸில்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மைசைரன் அவசர எச்சரிக்கை முறை: கைப்பேசி உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகாது – ஃபாஹ்மி ஃபாட்ஸில்

மலேசியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பான மைசைரன், கைப்பேசி உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகாது என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் செயல்படுத்தப்படும் இவ்வமைப்பு, செல் புரோகாஸ்ட் சிஸ்டம் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் உள்ள இணக்கமான கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பும்.

இதற்காக எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, பயனர்கள் பதிவு செய்யவோ தேவையில்லை என்றும், எச்சரிக்கைகளைப் பெறுவதற்குக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும் அவர் விளக்கினார்.

மேலும், வரும் நவம்பர் 29ஆம் தேதி காலை 10.10 மணிக்கு நாடு முழுவதும் மைசைரன் எச்சரிக்கைச் செய்திகளைப் பெறும் வசதி சோதிக்கப்படும் என்றும் ஃபாஹ்மி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை

மலேசியாவுக்குள் நுழையும் முன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய போலீஸ் சோதனை

கிள்ளான் பள்ளத்தாக்கில் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவை: 15551 என்ற எண்ணை அழைக்கலாம்!

கிள்ளான் பள்ளத்தாக்கில் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவை: 15551 என்ற எண்ணை அழைக்கலாம்!

பல்கலைக்கழகப் பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து காணொளி பதிவு: மாணவர் மீது குற்றச்சாட்டு

பல்கலைக்கழகப் பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து காணொளி பதிவு: மாணவர் மீது குற்றச்சாட்டு

கேஎல்ஐஏ விமான நிலையக் கழிவறையில் வழுக்கி விழுந்த சபா அமைச்சர்: தலையில் தையல்

கேஎல்ஐஏ விமான நிலையக் கழிவறையில் வழுக்கி விழுந்த சபா அமைச்சர்: தலையில் தையல்

எஸ்பிஎம் 2026 தேர்வு: 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

எஸ்பிஎம் 2026 தேர்வு: 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

தனிப்பட்ட சவால்களை வென்று சாதனை: யுஎஸ்எம் பட்டமளிப்பு விழாவில் மூவருக்குச் சிறப்பு விருதுகள்!

தனிப்பட்ட சவால்களை வென்று சாதனை: யுஎஸ்எம் பட்டமளிப்பு விழாவில் மூவருக்குச் சிறப்பு விருதுகள்!