சரவாக், கூச்சிங்கில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கழிவறைக்குள் எட்டிப் பார்த்து, கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாக 22 வயது மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி காலை 11.20 மணியளவில், பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பெண்கள் கழிவறையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் 509ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, மாணவர் அதனை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வழக்கு விசாரணை நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 5,000 ரிங்கிட் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.








