பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட சவால்கள் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளையும் கடந்து, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூன்று பட்டதாரிகள் உயரிய விருதுகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
ஈப்போவைச் சேர்ந்த 23 வயது எஸ். தர்மினி துணைவேந்தர் தங்கப் பதக்கத்தையும், திரங்கானு மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஃபாரிஸா முஹமட் பௌஸான் பூமிபுத்ரா பிரிவுக்கான அரச கல்வி விருதையும் பெறுகின்றனர்.
ஆட்டிசம் பாதிப்புடன் கல்வி பயின்ற 24 வயது ஓங் ஸி லின், 3.82 ஒட்டுமொத்தத் தரப் புள்ளிகளைப் பெற்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான யுஎஸ்எம் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளார்.
பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் பகுதிநேரப் பணியாற்றிய ஃபாரிஸா, குடும்பத்தின் முதல் பல்கலைக்கழகப் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், மூவரும் தங்களது சாதனைகளைப் புதிய கல்வி மற்றும் தொழில் இலக்குகளை நோக்கிய தொடக்கமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.








