Nov 23, 2026
Thisaigal NewsYouTube

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

மலேசியத் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள், 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை வென்றிருப்பது, உள்ளூர் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதாகத் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

'மச்சாய்' திரைப்படத்திற்காக சஞ்சய் பெருமாள், சிவானந்தம் ஆகியோர் சிறந்த அசல் கதை விருதையும், அதே திரைப்படத்தில் நடித்த குபேன் மகாதேவன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றனர்.

திரைப்படத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களித்த சுகன் என்ற பஞ்சாட்சரம் பி. நல்லையாவுக்கு சிறப்புக் கலைஞர் விருது வழங்கப்பட்டது. மேலும், சஞ்சய் பெருமாள் எழுதி இயக்கிய 'புளுஸ்' திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படச் சுவரொட்டி விருதை ஸ்கைஸ்ர்ன் ஸ்டூடியோஸ் வென்றது.

இந்த அங்கீகாரங்கள் தனிநபர்களின் வெற்றியாக மட்டுமன்றி, உள்ளூர் தமிழ் திரைப்படத் துறையில் திறமைகளும் படைப்பாற்றலும் தொடர்ந்து வளர்வதற்கான ஆற்றலை வெளிப்படுத்துவதாக தியோ நி சிங் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 'குடம்' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதுடன், படைப்பாக்க உள்ளடக்க நிதித் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகை உட்பட மொத்தம் 10 விருதுகளை வென்றது.

விருதுகளைப் பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தியோ நி சிங், மலேசியத் திரைப்படத் துறைக்குத் தொடர்ந்து பங்களிக்கும் அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

2026-ஆம் ஆண்டு எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடக்கம்: 4,20,898 மாணவர்கள் பங்கேற்பு

4 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு பயணத் தடை - குடிநுழைவுத்துறை இயக்குநர் தகவல்

4 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு பயணத் தடை - குடிநுழைவுத்துறை இயக்குநர் தகவல்