நெகிரி செம்பிலான் மாநிலம், கெங்கேங், உலு பெரானாங், தாமான் மெலாத்தி பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளதால், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இரண்டாம் படிவ மாணவியான சென் யூகி, கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அப்போது அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கால் சட்டை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இரவு 9.46 மணியளவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா Jதெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சிறுமி குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








