Nov 23, 2026
Thisaigal NewsYouTube

61% மலேசியர்களிடம் அவசரத் தேவைக்குக்கூட ரிம 1,000 சேமிப்பு இல்லை - பேங்க் நெகாரா அறிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
61% மலேசியர்களிடம் அவசரத் தேவைக்குக்கூட ரிம 1,000 சேமிப்பு இல்லை - பேங்க் நெகாரா அறிக்கை

மலேசியர்களில் 61 விழுக்காட்டினரிடம் அவசரத் தேவைகளைச் சமாளிப்பதற்குக் கூட குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சேமிப்பு இல்லை என்று 2024-ஆம் ஆண்டு பேங்க் நெகாரா புள்ளிவிவரங்கள் கூறுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப் தெரிவித்துள்ளார்.

கூச்சிங்கில் உள்ள அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் கிளையில் நேற்று நடைபெற்ற ‘ஜூ கீத்தா மெலாபுர், அனாக் சரவாக்’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிப்பதற்குப் போதிய சேமிப்பு இல்லாத நிலையில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டால், குறைந்தது மூன்று மாதங்களுக்கான செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்குச் சேமிப்பு இல்லாதவர்களாக 37 விழுக்காடு மலேசியர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் நாட்டில் நிலவும் நிதி சார்ந்த சவால்களைப் பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், மக்களிடையே நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் தொடர்ந்து மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்றார்.

 

 

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →