புதிய பேரிடர் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை முறையைப் பயன்படுத்த முடியாத கைப்பேசிகளுக்கும், குறுஞ்செய்தி வாயிலான அவசர எச்சரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உருவாக்கியுள்ள புதிய பேரிடர் முன்னெச்சரிக்கை முறை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறுஞ்செய்தி எச்சரிக்கை வசதிக்கு மாற்றாக அமையாது என்றும், அதற்குத் துணையாகச் செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், வெள்ள அபாயமுள்ள ஆற்றங்கரைப் பகுதிகளில் எச்சரிக்கை ஒலிப்பான்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார்.
இதற்கிடையில், புதிய எச்சரிக்கை முறையின் ஆரம்பக்கட்டச் சோதனை நாளை நாடாளுமன்றத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நவம்பர் 29ஆம் தேதி முழுமையான சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஃபாஹ்மி தெரிவித்தார்.








