Nov 22, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தகவலை அவரது பத்திரிகைச் செயலாளர் முஹமட் ஃபாஷா முஸ்தஃபா இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜுவாசே சட்டமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் லாசிமின் உடல்நிலை தற்போது படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து அக்கறை தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ள முஹமட் ஃபாஷா, அவர் விரைவில் முழுமையாகக் குணமடையவும், நல்ல உடல்நலத்துடன் திரும்பவும் அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணமும், அனுமதிக்கப்பட்ட நேரமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →