Nov 22, 2026
Thisaigal NewsYouTube

‘தவறிழைத்த 25 பேருக்கு மறுவாழ்வு வாய்ப்பு – புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்கிய உள்துறை அமைச்சு’

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘தவறிழைத்த 25 பேருக்கு மறுவாழ்வு வாய்ப்பு – புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்கிய உள்துறை அமைச்சு’

தவறிழைத்தவர்களுக்கும் திருந்தி, சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக மீண்டும் வாழ இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

கெடா, லூனாஸில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சின் நல்லொழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் இணைந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், நல்லொழுக்கம் என்பது வார்த்தைகளில் மட்டுமல்ல, மனிதர்களிடம் காட்டும் அக்கறை, பொறுப்பான செயல்கள் மற்றும் சமூகத்திற்கு ஆற்றும் நன்மைகளில் வெளிப்பட வேண்டும் என்றார்.

தண்டனை வழங்குவது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது; தவறிழைத்தவர்கள் மனம் திருந்தி, புதிய வாழ்க்கையை உருவாக்கி சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான மறுவாழ்வு என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கெடா மற்றும் பினாங்கைச் சேர்ந்த 25 பேர் பரோல், PBSL மற்றும் சிறைவாசிகளுக்கான தொழில்துறை மறுஒருங்கிணைப்பு திட்டங்களில் பங்கேற்றனர். அவர்களில் சிலர் தங்களது உழைப்பில் ஈட்டிய வருமானத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

தீபாவளி ஒளி இருளை அகற்றுவது போல, மறுவாழ்வு வாய்ப்பு தவறிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மறுவாழ்வு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் சமூகத்தின் பங்களிப்பே மறுவாழ்வு முயற்சிகளின் வெற்றிக்கு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →