கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை ஒன்று நாயைத் துரத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இச்சம்பவம் இரவு சுமார் 7.30 மணியளவில் பண்டார் உத்தாமா குவா மூசாங் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் யானை ஒன்று நாயை விரட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து அந்த யானை வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சமய வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், யானை அப்பகுதியிலிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.








